Categories
மாநில செய்திகள்

விரைவில் குணமடைந்து வா சூர்யா…. அன்புடன் தேவா – மம்முட்டி டுவிட்…!!

விரைவில் குணமடைந்து வா சூர்யா என்று ரஜினியை நடிகர் மம்முட்டி தளபதி படத்தை குறிப்பிட்டு ரஜினிக்கு டுவிட் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்த” படப்பிடிப்பின்போது படக் குழுவில் இருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் ரஜினிக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.

மேலும் ரத்த அழுத்தம் கொஞ்சம் உயர்வாக இருப்பதால் ரஜினிக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் நடிகர் ரஜினி விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என்று நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து நடித்த தளபதி படத்தின் கதாபாத்திரங்களில் குறிப்பிட்டு “விரைவில் குணமடைந்து வா சூர்யா. அன்புடன் தேவா” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |