Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! குழந்தையின் தொண்டையில்…. சிக்கிய தைல மூடி…. அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தையின் தொண்டையில் சிக்கிய மூடியை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்யாமல் பத்திரமாக நீக்கியுள்ளார் .

பொதுவாக சின்ன குழந்தைகள் விளையாடும் போது கீழே கிடக்கும் பொருட்களை எடுத்து வாயில் வைத்து விடும். எனவே பெற்றோர்கள் கவனமுடன் குழந்தைகளை கவனிக்க வேண்டும். கீழே கிடைக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் கூட குழந்தைகள் உடனே அதை எடுத்து வாயில் வைக்கும். சில சமயம் அதை விழுங்கி விடும். இது போன்று மதுரை அருகே குண்டுவேலம்பட்டியை சேர்ந்த ஆதித்யன் என்ற ஒன்பது மாத குழந்தை ஒன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது கீழே கிடந்த தைல பாட்டில் மூடியை எடுத்து விளங்கியுள்ளது. இதனால் அந்த பாட்டில் மூடி குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் மூடியை அறுவை சிகிச்சை செய்யாமலேயே பாதுகாப்பாக வெளியே எடுத்து சாதித்துள்ளனர்.

Categories

Tech |