அப்போது அவர் கூறுகையில், “நான் 21 ஆண்டுகளாக அந்த அரசியல் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) ஒரு அங்கமாக இருந்தேன் என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். அந்தக் கட்சி எந்தஒரு ஒழுக்கத்தையும் பின்பற்றுவதில்லை. அது ஒரு பெருநிறுவனம் போல மாறிவிட்டது. அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி, சரியான அரசியல் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளேன்.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக இருந்த முந்தைய அரசாங்கத்தின் (சிபிஎம்) அடிச்சுவட்டை மம்தா பானர்ஜி பின்பற்றுகிறார். வேறு எந்த மாறுபாடும் இல்லை. வங்கத்தில் மக்களுக்காக ஆட்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும்.நாம் உண்மையில் பொருளாதார சீர்திருத்தத்தை விரும்பினால், வங்காளத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க விரும்பினால், பாஜகவை ஆதரிக்க வேண்டும்.
வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்” என்றார். இதையடுத்து மேற்கு வங்கத்தில் 135 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டி மறைமுகமாக ஆளுங்கட்சி மீது குற்றஞ்சாட்டினார். மேலும், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கத்தை பாஜக கைப்பற்றும் என்றும் சுவேந்து அதிகாரி கூறினார்.