28 வயது கணவர் தனது 51 வயது மனைவியைகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலத்தில் கோர கோணம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஷஹாகுமாரி மற்றும் அருண். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஆனால் ஷஹாகுமாரிக்கு 51 வயது மற்றும் அருணுக்கு 28 வயது என்று இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக கோரகோணம் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
ஆனால் இவர்களுக்கு இடையே நடைபெற்ற திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. எனவே திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என ஷஹாகுமாரி அருணை வற்புறுத்தியுள்ளார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இவ்விவகாரம் தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மிகவும் கோபமடைந்த அருண் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
எனினும் அருண் ஷஹாகுமாரியை கொலை செய்ய எடுத்த அனைத்து முயற்சிகளில் இருந்தும் ஷஹாகுமாரி தப்பித்துவிட்டார். ஆனால் தன்னை கொலை செய்ய திட்டமிடுவது தன் கணவர் தான் என்ற விவரம் ஷஹாகுமாரிக்கு தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில் குமாரி உடலில் மின்சாரம் பாய்ந்து நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு ஷஹாகுமாரியின் இறப்பு தொடர்பான சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவரது கணவர் அருணை அழைத்து விசாரித்தபோது ஷஹாகுமாரியின் உடலில் மின்சாரம் பாய செய்து அருண் தான் கொலை செய்துள்ளார் என்ற உண்மை வெளிவந்துள்ளது. மேலும் கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறு, வயது வித்தியாசம் இவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது, முதலான பல காரணங்களுக்காக ஷஹாகுமாரியை தான் கொன்றதாக அருண் கூறியுள்ளார். இதனையடுத்து அருணை போலீசார் கைது செய்துள்ளனர்.