Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

5 கிரேன் உதவியுடன்…. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு… 40 டன் எடையில் காளி சிலை…!!

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 40 டன் எடை உள்ள பிரம்மாண்ட காளிதேவி தேவியின் சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் முத்தையா ஸ்தபதி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார்.  இச்சிற்பக் கலைக்கூடத்தில் முத்தையாஉடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.  இவ்விடத்தில் விநாயகர் சிலை, அம்மன் சிலை போன்ற பல வகையான சாமி சிலைகள் செதுக்கப்பட்டு பல் வேறு இடத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா கபாலி தப்போ சித்தா ஆசிரமத்தில் உள்ளவர்கள் 21 அடி உயரத்தில் பிரம்மாண்ட காளி தேவி சிலையை செய்வதற்காக முத்தையா ஸ்தபதியை சென்று பார்த்தனர்.

இதனைத்தொடர்ந்து பத்துக்கும் அதிகமான சிற்ப கலைஞர்களை கொண்டு 21 அடி உயரத்தில் 18 பெரிய கைகளுடன் கூடிய 40 டன்எடையுள்ள பிரம்மாண்ட காளி சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டார் ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சிலை செதுக்கும் பணி தாமதமானது. இந்நிலையில் தற்போது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட காளி சிலை தத்ரூபமாக வடிவமைத்து முடிக்கப்பட்டது.  இதனை அடுத்து இச்சிலை 5 கிரேன்கள் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள பிரகாசம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது 21 அடி உயரமும் 18 கைகளுடன் கூடிய பிரம்மாண்ட காளி தேவி சிலையை வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆசிரமத்தில் வைத்து வழிபட உள்ளனர் சிலையை பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது

Categories

Tech |