Categories
தேசிய செய்திகள்

கல்விக்கு வயதில்லை… “64 வயதில் நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்”..!!

ஒடிசாவை சேர்ந்த 64 வயதான வங்கி ஊழியர் ஒருவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஒடிசா பர்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன்(62) என்பவர் வங்கி ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்துவந்துள்ளது. இன்டர்மீடியட் வகுப்பு முடித்து தேர்வு எழுதிய போது மருத்துவத்தில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதனை அடுத்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிஎஸ்சி படிப்பில் இணைந்து விட்டார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் என தற்போது ஓய்வு காலத்தில் கனவை நோக்கி பயணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

அந்த வகையில் நீண்ட நாள் கனவான மருத்துவர் படிக்க வேண்டும் என்ற முடிவை 40 ஆண்டுகளுக்குப் பின் நீட் தேர்வு எழுதி தேசிய அளவில் 5,94,380 வது இடத்தை பிடித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் இவருக்கு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. புர்லா பகுதியில் உள்ள அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரியில் (VIMSAR) எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார். படித்து முடித்துவிட்டு கிளினிக் தொடங்க வேண்டும் என்பது இவரது கனவாகும்.

Categories

Tech |