புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் நாளை முதல் இயங்காது என தொழிற்சங்கத்தினர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆனால் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. புதுச்சேரியில் அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதனால் அதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அதன்படி புதுச்சேரியில் அரசு பேருந்துகள் அனைத்தும் நாளை முதல் இயக்க மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பேருந்து பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அரசு இதற்கு ஒரு முடிவு செய்யாவிட்டால், பொது மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும்.