Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி… போட்டியாளர்கள் உற்சாகம்… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. ‘பூமி’ படத்தின் புரமோஷன் காரணமாக நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் . அதில் முதலில் கமல்ஹாசனை சந்தித்த ஜெயம் ரவி பின்னர் அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து பேசுகிறார் . அப்போது ஜெயம் ரவி ‘வின்னிங் டைம் வந்துவிட்டது . இறுதிப்போட்டி நெருங்கி விட்டது. எல்லோரும் சூப்பராக விளையாடுகிறீர்கள். செம என்டர்ட்டெய்னிங்கா இருக்குது . உங்களின் உண்மையான திறமையை காட்டினாலே போதும் .

நீங்கள் சின்சியராக விளையாடுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது’ என்கிறார் . இதையடுத்து ‘பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறீர்களா?’ என்று கமல்ஹாசன் கேட்டபோது ‘நீங்கள் எது செய்தாலும் நான் பார்ப்பேன் ,நான் உங்களுடைய வெறித்தனமான பக்தன்’ என்று ஜெயம் ரவி கூறுகிறார். இன்று ஜெயம் ரவி அகம் டிவி வழியே மட்டும் போட்டியாளர்களை சந்திப்பாரா? அல்லது பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வாரா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Categories

Tech |