Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே…. இந்த நாட்களில் மது வேண்டாம் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

புத்தாண்டின் போது வட இந்தியர்கள் மது அருந்த வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 28 முதல் கடுமையான குளிர் இருப்பதாலும், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாலும் புதிய வருட கொண்டாட்டங்களை முன் வைத்து மது அருந்துவது நல்லது கிடையாது என்று இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குளிர்ச்சியின் நீண்டகால வெளிப்பாடு காரணமாக நிலைமை மிகவும் மோசமடையலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே மது பிரியர்கள் மது குடிக்க வேண்டாம் என்றும் மதுவினால் குடிப்பவரின் உடல் வெப்பநிலையை குறைகிறது என்றும் எச்சரித்துள்ளது. எப்பொழுதும் வீட்டிற்குள் இருங்கள். வைட்டமின்-சி நிறைந்த சத்தான பழங்களை சாப்பிடுங்கள், கடுமையான குளிர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்ள சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. ஐஎம்டியின் முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வெப்பநிலை சற்று அதிகரித்தாலும், அது ஒரு குறுகிய கால நிவாரணமாக மட்டும் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |