கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கொட்டும் மழையில் உணவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நகரம் கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அவர்களது சகஜ வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் கொட்டும் மழையில் உணவு பொட்டலங்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Newscastle என்ற பகுதியில் மக்கள் சிலர் உணவு பொட்டலங்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து John Mccori உணவு வங்கியை சேர்ந்த இவர் கூறுகையில், உணவிற்காக இத்தனை நபர்கள் காத்திருப்பார்கள் என்று தான் நினைக்கவில்லை என்றும் வெளியில் வந்து பார்த்தபோது நான் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதை எவ்வாறு விளக்குவது என்றே தெரியவில்லை. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டியவர்கள் மழையில் நனைந்து கொண்டு நிற்பதைப் பார்த்து எனக்கு வருத்தமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த போதும் அனைவருமே உற்சாகமாகவே காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து நியூகேசில் உள்ள பல்கலைக்கழக ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து உணவு தட்டுப்பாடு நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் சமீபத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது என்று கூறியுள்ளது.