திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு இரண்டு நாள் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் பின்புறமுள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வருகின்ற 31ம் தேதி நள்ளிரவு வரையில் நீட்டிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகிற 29-ஆம் தேதி காலை 8 மணி முதல் மறுநாள் காலை எட்டு மணி வரையில் பௌர்ணமி உள்ளது. அதனால் கொரோனா பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பௌர்ணமி நாளான 29-ம் தேதியும் அதற்கு அடுத்த நாள் 30ஆம் தேதியும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வரவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
[10:51 PM, 12/26/2020] +91 94897 11232: நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக