Categories
சினிமா தமிழ் சினிமா

அந்நியன் பட ‘அம்பி’யை வைத்து போனில் கேள்வி கேட்ட ரசிகர்… அசால்ட்டா பதில் சொல்லும் ஆரி… ஆடிப்போன போட்டியாளர்கள்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கமலை சந்தித்து பின்னர் அகம் டிவி வழியே போட்டியாளர்களிடம் உரையாடினார். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் ஆரியிடம் ரசிகர் ஒருவர் போன் காலில் பேசுகிறார் . அந்த போன் காலில் பேசிய ரசிகர் ,’அன்னியன் படத்தில் அம்பி என்கிற நல்ல கதாபாத்திரம் வரும் அதை யாரும் விரும்புவதில்லை . ஏனென்றால் எப்போதும் ரூல்ஸ் பற்றி பேசிகிட்டே இருப்பார் .

இங்கு பிக்பாஸ் வீட்டில் எல்லாரும் சராசரி மனிதர்களாக உலா வரும்போது உங்களின் செயல் இந்த வீட்டை பாதிக்காதா ? என்று கேட்கிறார் . இதற்கு பதிலளித்த ஆரி ‘ பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும்போதே சொல்லிவிட்டார் இங்கு யாரும் நண்பர்களும் இல்லை ,எதிரிகளும் இல்லை . எல்லார்கிட்டயும் நான் கேள்வி கேட்பதால் குற்றம் வைப்பது அர்த்தமல்ல. அவர்களை தகுதி படுத்துவதற்கான கேள்வியாக நான் பார்க்கிறேன்’ என்று கூறுகிறார்.

Categories

Tech |