தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியின் போது பிrasanai veliyitta ன்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று அரசாணை அறிவித்தார்.
அந்த அரசாணையில், மாடுபிடி வீரர்கள் 300 பேர் மட்டுமே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி. 150 வீரர்கள் மட்டுமே எருதுவிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50 சதவீத பார்வையாளர்களே கலந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அங்கு உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். மாடுபிடி வீரர்களும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்று சான்று பெற்றிருக்க வேண்டும்.
காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டும் இருக்கலாம். அடையாள அட்டை மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை. காளைகளை பதிவு செய்யும் போது அந்தக் காளையின் உரிமையாளர் மற்றும் உடன் வரும் உதவியாளரும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பு பதிவு செய்துகொள்ள வேண்டும். காளையின் உரிமையாளரும், உதவியாளரும் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்று சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகத்தில் தமிழக அரசின் கோரானா தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். மேலும்,ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அதிகாரிகளும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.