சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜை முடிவடைந்ததால் மீண்டும் 30 ஆம் தேதி நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று நடந்து முடிந்தது. அதனையடுத்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த வருடம் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக மண்டல காலம் கலை இழந்துபோனது. கடும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வருடம் மண்டல கால பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டல மகரவிளக்கு பூஜை நேற்று நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தங்க அங்கி நேற்று முன்தினம் ஐயப்பன் விக்ரகத்தின் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மண்டல பூஜைக்கு பின்னர் இரவு 9 மணி அளவில் கோவில் நடை சாத்தப்பட்டது. இதனையடுத்து நேற்றுடன் 41வது நாள் மண்டல கால பூஜை நிறைவடைந்தது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படும். அதன் பிறகு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதுமட்டுமன்றி கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.