ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதால் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலேயே இருந்து வருகிறார்.
சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் “அண்ணாத்த” படபிடிப்பில் பங்கேற்ற 4பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் ரஜினிகாந்த்துக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தொற்று இல்லாமல் இருந்தாலும் ரஜினிகாந்த் தன்னை ஹைதராபாத்தில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அவரது மகளான ஐஸ்வர்யா தனுஷ் ரஜினிகாந்துடன் இருந்துள்ளார்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் மாறுபாடு மற்றும் சோர்வு தவிர வேற எந்த அறிகுறியும் இல்லை என்றும், நாடித்துடிப்பு உட்பட பிற அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையில் ரஜினிகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் அவருக்கு இருந்த ரத்த அழுத்தத்தை விட இப்பொழுது நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் ரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவே இருக்கிறது. இதனால் பயப்படும் நிலை எதுவும் இல்லை. மேலும் சில பரிசோதனை அவருக்கு செய்யப்பட உள்ளது. தீவிர கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்.பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தத்தின் அடிப்படையில் அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மாலை மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் வந்தவுடன் அவரது உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்கும் பட்சத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மதியம் மருத்துவ நிர்வாகம் முடிவு எடுக்கும் என்று தெரிவித்தனர்.