Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மீட் பண்ணிய பிக்பாஸ் பிரபலங்கள்..‌. வேல்முருகன் ,ஜித்தன் ரமேஷ்… வெளியான புகைப்படங்கள்…!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது . ஒவ்வொரு வாரமும் பிக்பாஸில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை வெளியேறிய சில பிக்பாஸ் போட்டியாளர்கள் சமீபத்தில் மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. முதலில் ரேகா, வேல்முருகன், சம்யூக்தா ,சுரேஷ் ஆகியோர் ஒரு குட்டி ரியூனியன் போட்டனர்.

பாடகர் வேல்முருகன்

இதையடுத்து அன்பு அணியான அர்ச்சனா ,நிஷா ,ரமேஷ் ஆகியோர் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டனர் . அந்த வகையில் தற்போது ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் . நாட்டுப்புற பாடகரான வேல்முருகன் அவ்வப்போது பிக் பாஸ்  வீட்டில் பாட்டு பாடி ரசிகர்களை கவர்ந்து வந்தார். மேலும் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும் அதில் தலையிடாமல் ஓரமாக நின்று வேடிக்கை பர்ர்ப்பார் . அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

Categories

Tech |