நடிகை சித்ராவின் புகைப்படங்களை குழந்தையாக்கி ரசிகர்கள் அழகு பார்த்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சித்ரா மறைந்தாலும் அவருடைய ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில் இறந்து நாட்கள் ஆனாலும் அவருடைய ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முல்லை இனி இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். மேலும் சித்ராவின் பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அவருடைய ரசிகர்கள் சித்ராவின் புகைப்படத்தைப் பேஸ் ஆப் மூலமாக சுட்டிக் குழந்தையாக மாற்றி அழகு பார்த்து வருகின்றனர். குழந்தையாக மாறிய அந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்கள் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.