கள்ளக்குறிச்சியில் பழனிசாமி என்பவர் 5 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சின்ன சேலத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.அப்போது அதே பகுதியில் வசித்து வரும் பழனிசாமி (வயது 38) என்பவர் அச்சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது அவளது தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அவர் வீட்டுக்கு வந்தவுடன் நடந்ததை கூறியுள்ளார். மகள் சொன்னதைக் கேட்ட தாய் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பழனிசாமி வீட்டிற்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளார்.
பழனிசாமி சிறுமியின் தாயாரை மிரட்டியுள்ளார். ஆகையால் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் பழனிசாமியை கைது செய்தனர்.