Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய திலகம் பிரபுவுக்கு பிறந்தநாள் ..‌. ட்விட்டரில் ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன குஷ்பு…!!!

நடிகர் பிரபுவின் பிறந்தநாளுக்கு நடிகை குஷ்பு ட்விட்டரில்  வாழ்த்து தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் மறைந்த நடிகர் சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு.  90-களில் முன்னணி கதாநாயகனாக இருந்த இவர் தற்போது  ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார் . இன்று இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் ,ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரபுவின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு டுவிட்டரில் தன் தந்தையுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ‘எனக்கு பிடித்த ஹீரோ’ என் தந்தைதான் என பதிவிட்டுள்ளார் .

இந்நிலையில் நடிகை குஷ்புவும் ட்விட்டரில் நடிகர் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் . அதில் ‘அற்புதமான சக நடிகர் ,எனது வாழ்வில் முக்கிய நண்பரான இளைய திலகம் பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். நடிகை குஷ்பு மற்றும் நடிகர் பிரபு இருவரும் இணைந்து சின்னத்தம்பி ,பாண்டிதுரை ,உத்தமராசா ,சின்ன வாத்தியார் ,மார்த்தாண்டன், தர்மசீலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் .

Categories

Tech |