நடிகை பிரியா பவானி சங்கர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர். இதையடுத்து தமிழ் திரையுலகில் ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் .
தற்போது இவர் நடிப்பில் ஓமண பெண்ணே ,களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வெளியாகவுள்ளது . இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . அதில் சிகப்பு நிற உடையில் தேவதைப் போல் பிரியா பவானி சங்கர் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் .