தமிழகத்தில் இன்று நான் முதல்வராக இருக்கிறேன், நாளை நீங்களும் முதல்வராகலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நான் முதல்வராக இருக்கிறேன், நாளை தொண்டர்களில் ஒருவரான நீங்களும் முதல்வராகலாம். மேலும் அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. தொண்டர்களில் ஒருவர் முதல்வராக இருக்கக்கூடிய ஒரே கட்சி எங்கள் அதிமுக கட்சி தான் என்று முதல்வர் புகழாரம் தெரிவித்துள்ளார்.