Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்… ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்… இந்தியாவின் அதிரடி தொழிலநுட்பம்…!!!

டெல்லியில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

டெல்லியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அவ்வாறு ரயில் சேவை தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ சேவையை நாளை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைக்கிறார். புதிய தொழில் நுட்பத்துடன் சிபிடிசி என்னும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இந்த சேவை இயங்க உள்ளது.

இதில் பயணம் மேற்கொள்ள பிரத்தியேகமான பயண அட்டையை மெட்ரோ உருவாக்கியுள்ளது. இந்த அதிரடி தொழில்நுட்பம் உலக நாடுகளிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. சாதாரண மெட்ரோ ரயில் சேவையை விட இந்த ரயில் சேவை மிகவும் விரைவாக நடைபெறும். இதனால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து நாளை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

Categories

Tech |