சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டை எதிர்பார்த்து மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை. அப்பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிக்க படுவர். மேலும் விதிகளை மீறும் ஓட்டல் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.