Categories
மாநில செய்திகள்

அதிமுக யாரையும் பார்த்து…. அச்சம் கொள்ள தேவையில்லை – பொன் ராதாகிருஷ்ணன்…!!

அதிமுக யாரையும் கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை என்று அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக பிரச்சாரக் கூட்டம் இன்று ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது. அப்போது கூட்டத்தில் பேசிய கே.பி முனுசாமி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றுள்ளார். மேலும் அமைச்ச ஜெயக்குமார் ஸ்டாலின் திமுகவின் தலைவர் கிடையாது என்றும் கிண்டல் செய்துள்ளார். மேலும் சில புல்லுருவிகள் அதிமுகவை வீழ்த்த நினைத்தார்கள். ஆனால் அது நடக்காமல் அவர்களின் எண்ணம் தவிடு பொடியாகி விட்டது.

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனியாருக்கு அளித்த பேட்டியில், அதிமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பேசியதை பார்க்கும்போது அவர்கள் அச்சத்தின் வெளிப்பாடு தெரிகிறது. அதிமுக யாருக்கும் பயப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார். இதன் காரணமாக அதிமுக மற்றும் பாஜக இடையே மனக்கசப்பு இன்னும் தீரவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |