Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மக்களுக்கு எச்சாரிக்கை ….! ”இனிமேல் எல்லையை தண்டினால் ரூ.5000 அபராதம்” அதிரடி உத்தரவு

இந்திய கடல் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் – தூத்துக்‍குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்‍கை விடுக்கப்பட்டுள்ளது 

தூத்துக்‍குடி மாவட்ட மீனவர்கள், இந்திய எல்லையை தாண்டி மீன்பிடிக்‍கச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்‍கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்‍கை விடுத்துள்ளார். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக்‍ கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்‍கைகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்‍குடியிலிருந்து கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லும் மீனவர்கள், இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்‍கக்‍கூடாது என்றும், மீறினால் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்‍கப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார். மேலும், மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின்படி நடவடிக்‍கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |