Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்…. கண்டுபிடித்த போலீசார்…. வெளியான புகைப்படம்….!!

காணாமல் போன இளம்பெண் காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். 

கனடாவைச் சேர்ந்த மாடலின் புர்க்ஸ் (24) என்ற இளம் பெண் கடந்த 25ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் woodbine Av+ Gerraard St E என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுளார் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் காணாமல் போயுள்ளார். மேலும் மாடலின் 5 அடி 10 அங்குலம் உயரம் உள்ளவர். மேலும் காணாமல் போன அன்று என்ன ஆடை அணிந்திருந்தார் என்று தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.

இதனை தொடர்ந்து இவரை தீவிரமாக தேடிவந்துள்ள நிலையில் தற்போது மேடலின் பத்திரமாக காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். ரொரன்ரோ காவல்துறையினர் இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக உதவிய அனைவருக்கும் நன்றி எனவும் கூறியுள்ளனர். இருப்பினும் அவர் காணாமல் போனதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |