Categories
தேசிய செய்திகள்

பாஜக பண்ணுறது சரியில்ல…! நீங்க வேணும்னா ஆட்சி செய்யுங்க… கடுப்பான கூட்டணி கட்சி ..!!

ஐக்கிய ஜனதா தளம் கட்சி விரும்பினால், பீகாரில் புதிய ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் சூசகமாக தெரிவித்துள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள், அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள துணைத் தலைவர் திரு.சிவானந்த் திவாரி, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை பலவீனப்படுத்திய பா.ஜ.க. தற்போது அக்கட்சியை அவமானப்படுத்த தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தில், ஏற்கனவே பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ.க., 6 ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்துள்ளதை வேறு எப்படி பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை திரு.நிதிஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகினால், தாங்கள் பா.ஜ.க.வுடன் கைகோர்க்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ள திரு.சிவானந்த திவாரி, இதில் முடிவெடுக்க வேண்டியது திரு.நிதிஷ்குமாரின் கையில் தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Categories

Tech |