Categories
தேசிய செய்திகள்

மோடி விவசாயிகளை திசை திருப்புகிறார் – மம்தா குற்றசாட்டு…!!

டெல்லியில் போராடும் விவசாயிகளை திசை திருப்பும் முயற்சியில் மோடி ஈடுபட்டுள்ளதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 32 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசாமல் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் விளைபொருட்களை மாநில அரசால் கொள்முதல் செய்வதை தடுக்கவும் புதிய வேளாண் சட்டத்தில் அம்சங்கள் உள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி விவசாயிகளுக்காக கவலைப்படுகிறார். ஆனால் நேரில் சென்று அவர்களின் பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண முன்வர வில்லை என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |