மர்மநபர் ஒருவர் பொது இடத்தில் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள லியோனிங் என்ற மாகாணத்தில் இருக்கும் கெயுவான் என்ற நகரில் உள்ள பின்லாந்து ஸ்டீம் பாத்திற்கு வெளியே திடீரென வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்கள் பலரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த நபரின் வெறிச்செயலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனை தடுக்க வந்த காவல்துறையினர் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர். இந்த நபர் யாங் என்ற குடும்ப பெயரால் ஊடகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் இக்கொடூர தாக்குதலின் பின்னணி என்ன என்று தெரியவில்லை. மேலும் சீனாவில் துப்பாக்கிகள் விற்பனை செய்யவும் வைத்திருக்கவும் தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் இதுபோன்ற தாக்குதல்களை கத்தி அல்லது வீட்டில் இருக்கும் வெடிபொருட்கள் கொண்டு செய்துவருகின்றனர். மேலும் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தற்போதுவரை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சமூகத்திற்கு எதிரான கருத்தை கொண்டவர்களாக இருந்துள்ளனர். மேலும் இந்த நபர் இக்கொடூர தாக்குதலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.