பாதுகாப்பு கருதி பம்பர்களை கார்களில் இருந்து நீக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது எதற்காக தெரியுமா?. தெரிஞ்சிக்கோங்க.
கார்களின் முன்பக்கம் பம்பர்கள் பொருத்தப்பட்டு இருந்தால் அதை அகற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி அகற்றாத வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்நிலையில் பம்பர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கார்களில் பம்பர் இருக்கிறது. அவர்களை அகற்ற சொல்லக்கூடாதா? என்று இந்த விஷயத்தில் பலர் கோபப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில் , கார்களின் முகப்பில் பம்பர் இருந்தால் நம் உயிருக்கே ஆபத்து வரலாம்.
பல லட்சம் மதிப்புள்ள கார் எங்கேயாவது மோதி சேதம் அடைந்து விடாமல் இருப்பதற்காக பம்பர் பொருத்தப்படுகிறது. ஆனால் விலைமதிப்பில்லாத நம் உயிரைப் பற்றி யாரும் சிந்தித்துப் பார்ப்பது கூட இல்லை. தற்போது புதிய புதிய மாடல்களில் கார்கள் சந்தைக்கு வருகின்றன. இந்த கார்களில் எல்லாமே ஓட்டுநர்களின் முன்பு ஏர்பேக் பொருத்தப்பட்டிருக்கும். காரின் முன்பக்கம் அழுத்தம் (அதாவது மோதும்போது) ஏற்படும் போது அந்த ஏர் பேக் ஓபன் ஆகி முகத்தில் படர்ந்து எந்த காயமும் ஏற்படாத வகையில் பாதுகாக்கும்.
இந்த ஏர் பேக் சிஸ்டம் வேலை செய்வதற்காக காரின் முன் பக்கத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் காரின் முன் பகுதியில் மோதல் ஏற்பட்டால் காரின் உள்ளே இருக்கும் ஏர் பேக் தானாகவே விரிந்து விடும். ஆனால் காரின் முன்பகுதி சேதம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக பம்பர் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் பம்பரால் அழுத்தம் கிடைக்காமல் ஏர் பேக் வேலை செய்யாமல் போய்விடும்.
எனவே மோதிய வேகத்தில் நாம் முன் பக்கம் விழும் போது மூக்கு மற்றும் தலையில் அடிபட்டு சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே அரசாங்கம் பாம்பரை நீக்க உத்தரவு போட்டுள்ளது. இதற்காகத்தான் வாகன சட்டப்படி வட்டார போக்குவரத்து மற்றும் காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள். அரபுநாடுகளில் காவல்துறையினர் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்தில் பம்பரை காண முடியாது. அப்படி இருந்தால் அங்கு அது போக்குவரத்து குற்றமாக கருதப்படுகிறது.