‘ கூலி நம்பர் 1 ‘ படத்தின் சிறிய காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .
இந்தி திரையுலகில் 1995 ஆம் ஆண்டு டேவிட் தவான் நடிப்பில் வெளியான ‘கூலி நம்பர் 1’ நகைச்சுவைத் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படம் வருண் தவான் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் ஒரு சிறிய காட்சி வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது . அதில் வருண் தவான் நகரும் ரயில் மீது குதித்து ,ஓடி தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்றுகிறார்.
https://twitter.com/NayabPokiri/status/1342179073674506240
ரயிலின் மேல் ஏறி குதித்து ரயிலை விட வேகமாக ஓடி கண்ணிமைக்கும் நொடியில் குழந்தையை காப்பாற்றும் இந்த காட்சி இயற்பியல் விதிகளை மிஞ்சும் அளவிற்கு அமைந்துள்ளது . மேலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்த காட்சியை தயாரித்த தயாரிப்பாளர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் .