Categories
உலக செய்திகள்

குப்பை கிடங்கில் கிடந்த பூனை…. காப்பாற்றப்பட்டு அரசாங்க பதவி…. அமைச்சரின் உருக்கமான வேண்டுகோள்…!!

குப்பை கிடங்கில் கிடந்த பூனை காப்பாற்றப்பட்டு சுகாதாரத்துறையில் பதவி வழங்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள ஒரு நகரில் குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு பூனை ஒன்று சாக்கு பையில் கட்டப்பட்டு குப்பைகளை பிரிக்கும் இயந்திரத்திற்குள் போகத் தயார் நிலையில் இருந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் பூனையை காப்பாற்றியுள்ளார். பூனையைக் காப்பாற்றிய மிக்கேல் டுகாஸ் இதுகுறித்து கூறுகையில், “சாக்கு பையில் மெல்லியதாக ஏதோ ஒரு உயிர் இருப்பதை கண்டேன். பின்னர் அதை திறந்து பார்த்தபோது இரண்டு கண்கள் என்னை பார்த்தது ” என்று கூறியுள்ளார்.

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதையடுத்து பூனை காப்பாற்றப்பட்டு சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு கால்நடை மருத்துவர்களால் பூனைக்கு பரிசோதனை நடத்தப்பட்டு ரஷ்ய அமைச்சரவையில் பூனைக்கு இடம் கிடைத்துள்ளது. பிராந்திய சுகாதார அமைச்சருக்கு உதவியாளராக அந்தப் பூனைக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் குல்நாரா கூறுகையில், “செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிக்கு நீங்கள்தான் பொறுப்பு என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களால் செல்லப்பிராணி வளர்க்க முடியவில்லை என்றால் அதை பாதுகாப்பாக வளர்க்க கூடிய யாரிடமாவது கொடுத்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |