பிரபல நடிகர் மகேஷ் பாபுவை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் நடிகர் ரன்வீர் சிங் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் 2010ஆம் ஆண்டு வெளியான ‘பாண்ட் பாஜா பாரத்’ என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இவர் பாம்பே டாக்கீஸ், லூட்டேரா ஆகிய படங்களில் நடித்துள்ளார் . கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற வரலாற்று திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருதின் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்றார் . கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘கல்லி பாய்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் இவருடன் பிரபல நடிகை ஆலியா பட் நடித்திருந்தார் .
இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஹீரோவான மகேஷ் பாபுவும் ,நடிகர் ரன்வீர் சிங்கும் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளனர் . இந்த விளம்பரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரன்வீர் சிங் ‘சிறந்த மனிதராக மகேஷ் பாபுவுடன் இணைந்து வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களின் உரையாடல்கள் எப்போதும் வளமானது . லவ் அண்ட் ரெஸ்பெக்ட் டூ பிக் பிரதர் மகேஷ் காரு’ என பதிவிட்டுள்ளார் . இதற்கு மகேஷ் பாபு ரன்வீர் சிங்கை டேக் செய்து ‘உங்களுடன் வேலை செய்தது மிகச் சிறப்பாக இருந்தது . இங்கும் அதே உணர்வு தான்’ என்று பதிவிட்டுள்ளார்.