வரும் வருடம் 2021 தொடக்கத்தில் வாட்ஸ் ஆப்பில் புதிய அம்சங்கள் அப்டேட் செய்ய போவதாக தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் என்பது அனைவரின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. இதன்மூலம் கலந்துரையாடல், வீடியோ கால் போன்ற வசதிகள் மூலம் பயன் பெற்று வருகின்றோம். புதிதாக வாட்ஸ் அப்பில் பணபரிமாற்றம் போன்ற புதிய புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வருகிறது.
மேலும் அதில் வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்நேரத்திலும் மிஸ்டு குரூப் கால்ஸ் – குரூப்களில் இணையும் வசதி, ஒரே நேரத்தில் பல புகைப்படங்கள், வீடியோக்களை போஸ்ட் செய்யும் வசதியை வாட்ஸ்அப் வெப் கால் உள்ளிட்ட வசதிகள் 2021 ஆம் வருடம் தொடக்கத்தில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.