தப்பியோடிய கொலையாளியை 7 வருடங்களுக்கு பின் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
பங்களாதேஷைச் சேர்ந்த மௌஸம் அலி என்கிற சர்பார் (40). இந்த நபர் அவரது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ஜாஹிதுல் இஸ்லாம் என்ற நபரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதனால் டெல்லி காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கடந்த 2010ஆம் வருடம் ஜாமீனில் வெளியே வந்த அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் பங்களாதேஷ் நீதிமன்றமானது 2013 வருடத்தில் ஜாஹிதுல் கொலை செய்யப்பட்ட வழக்கில் மௌஸம்அலிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற அவர் சில நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார். பின்பு சட்டவிரோதமாக டெல்லியிலுள்ள சீமாபுரியில் ஸ்கிராப் டீலர் ஆக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இதைதொடர்ந்து கிரைம் பிரான்ச் குழுவிற்கு இன்பார்மர் ஒருவர் தகவல் அளித்துள்ளார். இதன்படி மௌஸமின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து வந்த கான்பூர் காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை அன்று அவர் தங்கியிருந்த இடத்தில் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அப்போது அவரிடம் துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. அதனால் அவருக்கு ஆயுதச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.