17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
தஞ்சாவூர் மாவட்டம் வள்ளலார் நகரை சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மகன் உத்திராபதி (வயது 20) கடந்த நான்கு ஆண்டுகளாக திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள டையிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் உத்திராபதி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்கு தெரியாமல் அழைத்துச் சென்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் அவர்கள் தஞ்சாவூரில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணைக்குப் பின் உத்திராபதி சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியது தெரிய வந்தது. அதன் பின் அனைத்து மகளிர் போலீசார் உத்திராபதி மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறுமி கோவை பெண்கள் காப்பகத்திற்கு போலீசாரால் அனுப்பிவைக்கப்பட்டார்.