Categories
தேசிய செய்திகள்

தமிழக டீச்சர் சூப்பர்…! நீங்கள் தான் நாட்டுக்கு தேவை…. வெகுவாக பாராட்டிய மோடி …!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் சென்றடைய வேண்டும் என பிரதமர் திரு நரேந்‌திர மோதி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோதி, நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் சென்றடைய வேண்டும் என்றும், உள்ளூரில் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் திரு மோதி, உலகளவில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்க தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் முன்வர வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் உலகளவில் உற்பத்தி மற்றும் வியாபார சந்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

உள்நாட்டில் தயாரான பொருட்களை வாங்குவதற்கு இந்திய மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும், ஓராண்டில் நமது சிந்தனையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் திரு மோதி குறிப்பிட்டார். இதற்கிடையே, கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பாடங்களை வீடியோவாக உருவாக்கி கற்றுத் தந்த தமிழகத்தின் விழுப்புரத்‌தைச் சேர்ந்த தமிழாசிரியை ஹேமலதா என்பவரை பிரதமர் திரு மோதி பாராட்டினார்.

Categories

Tech |