இந்தியாவில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர், தினசரி கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது- 279 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, தினசரி கொரோனா பலி மற்றும் கொரோனா பாதிப்பு கனிசமாக குறைந்துள்ளதாக, சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில், குணமடைவோர் விகிதம் 95 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.