Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…” சீனிக்கு பதில் இதுதான் வழங்க வேண்டும்”… விவசாயிகள் கோரிக்கை..!!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2,500 ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதற்காக 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, திராட்சை, முந்திரி, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும். ஆனால் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை வழங்கக்கோரி தஞ்சை கரும்பு விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: “அண்மையில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் தற்போது வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வெல்லம் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்து விடும் நிலையில் 30 கிலோ கொண்ட ஒரு சிற்பம் 1000 முதல் 1500 வரை விலை போகிறது. உரம் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் விவசாயிகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளனர்.

தற்போது தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் சர்க்கரையை வழங்குவதற்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளனர். எனவே அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து சக்கரைக்கு பதிலாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றும், அது விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் அளிக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறியுள்ளனர். இப்போதைய நாட்களைவிட எல்லாம் பொங்கலுக்கு சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்ப்பது வழக்கம்.

Categories

Tech |