இந்தியாவில் கொரோனா காரணமாக ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் மார்ச் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் போன்றவை சிரமம் ஏற்படுவதாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த காலம் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 2020 முதல் காலாவதியாகும் சான்றிதழுக்கு இது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசமும், மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் இன்னும் முழுமையாக சரியாகாத நிலையில் இதை கருத்தில் கொண்டே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.