சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஆலயங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நாளை முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற உள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் இல்லை.
எனவே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 200 பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்ட பக்தர்களும் பங்கேற்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.