சாதாரணமாக கிடைக்கும் செம்பருத்தி பூவில் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
உலகம் முழுவதும் பல வகையான பூக்கள் இருக்கின்றன. இவற்றில் வாசனை தரும் பூக்களும் இருக்கின்றன, வாசனை இல்லாத பூக்களைக் இருக்கின்றன. இதில் சில பூக்கள் மனிதர்களின் நோய்களை போக்கும் குணம் கொண்டவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பூக்களில் ஒன்றுதான் இந்த செம்பருத்திப் பூ. நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இதில் ஏராளமான நன்மைகளும், பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இதன் இலை, பூ, வேர் ஆகியவை ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. அந்தவகையில் செம்பருத்தி பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை தற்போது பார்க்கலாம்.
பயன்கள்:
1.செம்பருத்தி பூவின் சாற்றை சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
2.வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் உள்ளவர்கள் தினமும் செம்பருத்தி பூவை சாப்பிட்டால் புண்கள் ஆறும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் புண்கள் ஆறும்.
3.சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு பளபளப்பை அளிக்கும். இந்த பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் பேன் தொல்லை குறையும்.
4.பத்து பூக்களின் இதழ்களை நீரிலிட்டு காய்ச்சி குடித்துவர சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை தரும்.
5.கர்ப்பப்பை நோய்கள், இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செம்பருத்தி பூ செயல்படுகிறது. கொஞ்சம் பூவிதழ்களை 100 மில்லி லிட்டர் நீரில் கொதிக்கவைத்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
6.செம்பருத்திப்பூவை காய வைத்து போடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் சம அளவு மருதம் பட்டைத்தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை மாலை சாப்பிட ரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து ரத்த சோகை குறையும்.
7.மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் ரத்தப்போக்கை குறைக்க 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நல்லது