தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது . இதையடுத்து புதிய கொரோனா பரவி வருவதாலும், முந்திய கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தகவல் வெளியாகியது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். உருமாறிய கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும், பள்ளிகள் குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது. தற்போதுள்ள சூழலில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.