பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மும்பை அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனில் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவுவதால் உலக நாடுகளிடையே அச்சம் நிலவி உள்ளது. மேலும் பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகின்றது. இந்நிலையில் கேரளாவிலும் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி உள்ளது. மேலும் தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டை மும்பை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பரிசோதனை செய்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பின் பயணிகள் தங்களை ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறி இல்லாதவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கென தனி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.