Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுவன்… ஆற்றுப்படுகையில் கிறிஸ்மஸ் பண்டிகை… சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த  சிறுவன் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு  தொலைபேசியில்  அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ரப்பர் படகு மூலம் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீருக்கு அடியில் உயிரிழந்த  நிலையில் கிடந்த சிறுவனின் உடலை கரைக்கு எடுத்து சென்றனர். விசாரணையில் அந்த சிறுவன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி ரமேஷ் என்பவரது 14 வயது மகன் சூர்யா என்பது தெரியவந்தது.

கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் சூர்யா தனது தந்தையுடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள  தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளான். இந்நிலையில் நேற்று அனைவரும் சேர்ந்து ஆற்றில் குளிக்கச் சென்றபோது சூர்யா தண்ணீரில் இழுத்து  செல்லப்பட்டு உயிரிழந்துள்ளான். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |