உத்தரகாண்ட் மாநில முதல்வர் கொரோனா மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொடிய கொரோனா வைரஸால் தற்போது வரை அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் திருவேந்திர சிங் ராவத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 18ம் தேதி அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கொரோணா பாதிப்பில் இருந்து இன்னும் அவர் குணம் அடையாததால், மேல்சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது.