Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கடலை மாவு பிரட் டோஸ்ட்… செய்து பாருங்கள் …!!!

பிரட் துண்டுகள்          – 6
பச்சை மிளகாய்          – 3
எள்                                    –  2 சிட்டிகை
கடலை மாவு               –  2 கப்
உப்பு                                 – தேவையான அளவு
வெங்காயம்                 – 2
எண்ணெய்                    – 2 கப்
தண்ணீர்                         – 1 கப்
ஓமம்                               – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள்              – 1 டீஸ்பூன்

 செய்முறை :

முதலில் ஒரு பௌலில் பிரட்டை தவிர மற்ற எல்லா பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி ஓரளவு நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்

அதன் பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் தடவ வேண்டும். அடுத்து ஒவ்வொரு பிரட் துண்டையும் எடுத்து, கடலை மாவில் பிரட்டி, பின் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், கடலை மாவு பிரட் டோஸ்ட் தயார் . பின்பு பரிமாறவும்.

Categories

Tech |