நாடு முழுவதும் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லு படி காலத்தை மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் ஓட்டுநர் உரிமங்களை பிறப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியபோது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை முதன்முறையாக மார்ச் 30 அன்று நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பிறகு ஜூன் 9 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க நான்காவது முறையாக மீண்டும் கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதியோடு ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.