Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

Big Breaking: முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு ….!!

மாஸ்டர் படம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து இருக்கின்றார்.

மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சரை  நடிகர் விஜய் சந்தித்து இருக்கிறார். மாஸ்டர் திரைப்படம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் சந்தித்துப் பேசியதாக தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சொல்லப் பட்டிருந்தாலும் எந்த தேதியில் படம் வெளியாகும் என்று அறிவித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு படக்குழுவினருடன் நடிகர் விஜய் முதல்வரை சந்தித்து இருக்கின்றார்.

தற்போது திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். மாஸ்டர் படம் வெளியாக இருப்பதால்  100 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கின்றன. இந்த சந்திப்பு நேற்று இரவு 10 மணிக்கு மேல் மிகவும் ரகசியமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Categories

Tech |