Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் ஓபன் நோமினேஷன் … சிக்கப் போவது யார் ? யார் ?… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று அனிதா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது . ஆரி இந்த வாரம் தலைவர் பதவியில் இருப்பதால் அவரை போட்டியாளர்கள் நாமினேட் செய்ய முடியாது. முதலில் வந்த ரம்யா லெஸ் காம்பட்டிடிவ் என்று கூறி ஆஜித் மற்றும் கேபியை நாமினேட் செய்கிறார் . இதுயடுத்து வந்த ரியோ என்னுடைய எதிர்க்கட்சி என்று கூறி ரம்யாவை நாமினேட் செய்கிறார்.

பின்னர் சோம், சிவானியையும் அடுத்ததாக வந்த கேபி ‘இருவரும் என்ன  யோசிக்கிறார்கள் என்று தெரியலை’ என்று கூறி ஆஜித் மற்றும் சிவானியையும் இதையடுத்து வந்த சிவானி லெஸ் இன்வால்வ்மெண்ட் எனக்கூறி கேபி மற்றும் ஆஜித் ஆகியோரை நாமினேட் செய்தார். இதிலிருந்து கேபி, ஆஜித், சிவானி ஆகியோர் இந்த வாரம் நோமினேஷில் சிக்கியுள்ளனர் என்பது தெரிகிறது . மேலும் இதைத்தவிர வேறு யாரெல்லாம் இந்த வாரம் நாமினேட் செய்யப்படுகின்றனர் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும் ‌

Categories

Tech |